கோவை ஞானி : - ““பிரமிளோட நான் பேசிய நேரங்கள் மிகக்குறைவு. சில மணி நேரங்களில் அடங்கியிருக்கும். அவருக்கும் எனக்கும் இடையில சில பிளவுகள் இருந்துச்சு. இப்ப நீங்க (தங்கம்) இன்றைக்கு விளக்கியவை அந்த இடைவெளியைக் கடக்க போதுமானதாக இருந்தது.
பிரமிளுக்கான சூழல் மிகக் குறைவானதாக இருந்துச்சு. அவரை வெறும் இலக்கியவாதின்னு மட்டும் நெனைச்சுட்டு இருந்தாங்க. அவரின் இலக்கிய விமர்சனங்களை கேட்டுக்க வேண்டியது. மறுக்க வேண்டியது. அவர் ஒரு ஆன்மிகவாதிங்குற விஷயமே போய் சேரல. அதை மழங்கடிச்சுட்டாங்க. அவர் எழுத வேண்டியவற்றை ரொம்ப சுருக்கமாதான் எழுதியிருக்கார். அவர் ஆன்மிகவாதினா எப்படி மனிதர்களோட மனிதர்களா வாழ முடியும்? மெட்டிரீலியஸ்டிக்காகதானே வாழ் முடியும்? என்று கேட்டு அவரை புறக்கணிக்க முயற்சித்தார்கள். நல்ல வேளை கால சுப்ரமணியம் எப்படியோ பிரமிளுடனே சென்று எல்லாவற்றையும் பதிவு செய்து இன்று பிரமிளின் தொகுப்புகள 6 தொகுப்புகளாகக் கொண்டுவந்திருக்கிறார். இனி பிரமிளை அழிக்க முடியாது. அப்போதைய சூழலில், தமிழன்பனும் பிரமிளும்தான் நேரடியாக கருத்துக்களால் முரண்பட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் நான் எந்த பக்கமும் சாரவில்லை. கவனிச்சுகிட்டு இருந்தேன். பிரமிளும் என்னை பொருட்படுத்தல.
பிறகு கோவைக்கு வந்த பிரமிள் 3 நாட்கள் தங்கியிருந்தார். அப்போது அவரை சந்திச்சப்போதும், வீட்டுக்கு விருந்துக்கு அழைத்த பின், அவர் வருகை தந்தபோதும் நல்லா பேசிக்கிட்டு இருந்தாரு. அவர் கோவமே படல. நல்லா பேசுனாரு. அப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது, அவருக்கு பெருசா கோவமே இல்ல. குழந்தை சண்டை போடுற மாதிரிதான் அவரோட கோவம். ஆனால் மற்றவர்கள் அதை புரிந்துகொள்ளாமல், அவர் என்ன பேசினாலும், வஞ்சகத்தை வளர்த்துக்கொண்டார்கள். சரியா போராடினார் பிரமிள். நான் பிரமிளை மறுக்கவில்லை. நன்றாக உள்வாங்கிக் கொண்டிருந்தேன். வானம்பாடி பத்திரிகையில் பிரமிளை விமர்சித்து எழுதச் சொல்லி என்னை கேட்டபோது, ‘நான் எழுதமாட்டேன்’ என சொல்லிட்டேன்””!!
Comments