"ஆடி பட்டம் தேடி விதை"
வந்தவாசி விதைத்திருவிழா - ஆவணப்படம்
வந்தவாசி விதைத்திருவிழாவில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். 200 க்கும் மேற்பட்ட, தமிழ் நிலத்தின் மரபு விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. 500 முதல் 600 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த விழாவில் நான்காயிரம் பேர் கலந்துக்கொண்டது முதலில் ஆச்சர்யமாகத்தான் இருந்தது என்றார் விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பலராமன் அவர்கள். இந்த விழாவினை முன்னேற்பாடு செய்தபோது, 500 முதல் 700 பேர் கூடக்கூடிய அளவே இந்நிகழ்ச்சிக்கு இடம் ஏற்பாடு செய்து இருந்த நிலையில், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடினாலும், எந்த வித சலசலப்பும், அசம்பாவிதமுமின்றி விழா நடந்த விதம், தமிழ் மக்களின் பண்பை காட்டுகிறது. சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலிருந்து குடும்பத்துடன் தமிழ் மக்கள் கலந்துக்கொண்டார்கள்.
இந்த விழாவை ஆவணப்படுத்தியதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி. எந்த வித தயக்கமுமின்றி எங்களை வரவேற்று ஆவணப்படம் எடுக்க அனுமதித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. பலராமன் அவர்களுக்கு நன்றி.
ஆவணபடத்திலிருந்து சில காட்சிகளைத்தொகுத்துள்ளோம். இதில் வரும் பாடலை எழுதிப்பாடிய அன்புத்தம்பி சிறுவத்தியான் விக்னேஷ் க்கும் நன்றி.