பிரமிளின் " தமிழீழத் தாய் எழுக"..உலகின் தலைசிறந்த நாட்டுப்பண் - திரு. தங்கம் உரை
Glimpse of Upcoming Documentary "WALL TAX ROAD - CHENNAI - TAMILNADU"
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தையொட்டி அமைந்துள்ள வால் டாக்ஸ் சாலையிலும், பக்கிங்காம் கால்வாயை ஒட்டியும் அமைந்துள்ள எஃகு பாத்திரங்கள் தயாரிக்கும், சிறிய பட்டறைகளில் வேலை செய்யும் தமிழர்களை பற்றிய ஆவணப்படம் இது. 17 பட்டறைகளில் வேலை செய்யும் 65 நபர்களுக்கும் மேற்பட்ட தொழிளாளர்களின் உழைப்பையும், பணி செய்யும் முறையையும் ஆவணப்படுத்தியுள்ளோம். 40-க்கும் மேற்பட்ட வருடங்களாக இதே வேலையை செய்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள், ஒரு சிலருக்கு எத்தனை வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பது கூட நியாபகத்தில் இல்லை. ஆனால் அவர்களது வாழ்வு எந்த வகையிலும் முன்னேற்றம் அடையவில்லை என்பது தான் உண்மை. தினக்கூலி அடிப்படையில் வருமானம் ஈட்டும் இவர்கள், சென்னை மற்றும் அதன் அருகாமையிலிருக்கும் ஊர்களிலிருந்து வந்து வேலை செய்பவர்கள். போதிய கல்வி அறிவு கிடைக்காததால், வாழ்வாதார சவால்களில் சிக்கிக்கொண்டு, போதைக்கு அடிமையாகி பல ஆண்டுகளாக இதே பட்டறைகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.